இளைஞர்கள் பலர் பாஜக வில் இணைப்பு

X
By - Gowtham.s,Sub-Editor |28 April 2025 12:10 PM IST
சென்னிமலையில், இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பா.ஜ.வில் புதிய இளைஞர்கள் இணைப்பு
சென்னிமலை: திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலையில் இளைஞர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் தயாநிதி ஏற்பாAடு செய்திருந்தார். மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையிலும், சிறப்பு விருந்தினராக வசந்தராஜன் பங்கேற்பிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னிமலை, காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஒன்றியங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu