ஏற்காட்டில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு பேரணி

ஏற்காட்டில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு பேரணி
X
ஏற்காட்டில் வீதி முழுவதும் ஓடும் ஆட்டோவில் ஹச்ஐவி விழுப்புணர்வு பதாகைகளுடன்புது வித விழிப்புணரவு பேரணி

எச்.ஐ.வி., விழிப்புணர்வு: ஆட்டோவில் பேரணி

ஏற்காட்டில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு, ஏற்காடு அரசு மருத்துவமனை மற்றும் நம்பிக்கை மையம் ஆகியவை இணைந்து நேற்று எச்.ஐ.வி. - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை நடத்தின.

இந்தப் பேரணியை ஏற்காடு அரசு மருத்துவமனை மருத்துவர் கவிபூர்ணிமா மற்றும் கண்காணிப்பாளர் சகிலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்காடு பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. பேரணியின்போது எச்.ஐ.வி. - எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மாலதி, ஏற்காடு நம்பிக்கை மைய ஆலோசகர் வித்யா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பேரணியில், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி பெற்றுவரும் கோவை தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் ஒண்டிக்கடை ரவுண்டானாவில் எச்.ஐ.வி. பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future