என்.எம்.எம்.எஸ் தேர்வில் அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

என்.எம்.எம்.எஸ் தேர்வில் அரசுப்பள்ளி மாணவி  முதலிடம்
X
மாவட்ட அளவில் 147 மதிப்பெண்களுடன் அரசுப்பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சிறந்த சாதனை படைத்துள்ளார்

புன்செய்புளியம்பட்டியில் உள்ள பவானிசாகர் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகைக்கான தேர்வான என்.எம்.எம்.எஸ். (NMMS) தேர்வில் வெற்றிபெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் வெளியான முடிவில், அந்த பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவி இனியா, 147 மதிப்பெண்களுடன் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சிறந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த தலைமையாசிரியை சித்ரா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், இனியாவையும் மற்ற தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பாராட்டி கவுரவித்தனர். மாணவியின் இந்த வெற்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story