நந்தா கல்லுாரியில் பணி நியமன விழா

நந்தா கல்லுாரியில் பணி நியமன விழா
X
நந்தா கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதுடன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நந்தா கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பாராட்டு விழா:

ஈரோடு: நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் வேலைவாய்ப்பு தினம் சிறப்பாக நடைபெற்றது. கல்வியாண்டில் பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். கோவை கார்ட்ராபிட் மென்பொருள் நிறுவனத் தலைவர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர் ரமேஷ் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பணி நியமன சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

44 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் உட்பட, பலர் உயரிய நிறுவனங்களில் பணியிடங்கள் பெற்றதை அவர் பாராட்டினார். நிகழ்வின் தொடக்கத்தில் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

நந்தா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். மாணவர்களின் உழைப்பையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் நிகழ்வில் அனைவரும் பாராட்டினர்.

Tags

Next Story