வெளிநாட்டு எண்களில் இருந்து காதல் தம்பதியினருக்கு மிரட்டல்

வெளிநாட்டு எண்களில் இருந்து காதல் தம்பதியினருக்கு மிரட்டல்
X
காதல் தம்பதியினருக்கு, வெளிநாட்டு எண்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது காதல் மனைவி சுபஸ்ரீ, கலப்பு திருமணத்தினைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்பையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இருவரும் நேற்று ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்து, தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கோரினர்.

மனுவில், வெவ்வேறு சாதியினராக இருந்தாலும், கடந்த 16ம் தேதி கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். போலீசில் தகவல் அளித்து பாதுகாப்பு கோரியதையடுத்து, இரு பெற்றோர்களையும் அழைத்து சமரசம் பேசப்பட்டது. என் பெற்றோர் திருமணத்தை ஏற்றனர். ஆனால் சுபஸ்ரீயின் குடும்பம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது அக்காவின் முறைவனின் தாக்குதலுக்கும் சுபஸ்ரீ ஆளாகினார். தற்போது, வெளிநாட்டு எண்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருகின்றன. மேலும், சிலர் காரில் வந்து எங்களிடம் வேறுவிதமாக அணுக முயற்சிக்கின்றனர். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

Tags

Next Story