பைக் மீது லாரி மோதிதில் இளைஞர் பரிதாப பலி

பைக் மீது லாரி மோதிதில் இளைஞர் பரிதாப பலி
X
விபத்துக்குப் காரணமான லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளியை சேர்ந்த கணேசன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு அருகே சாலை விபத்து:

ஈரோடு:

ஈரோடு அருகே பரிசல் துறை பகுதியில், நேரம் மதியத்தை நெருங்கும் வேளையில் ஒரு பைக் – லாரி மோதல் விபத்து நிகழ்ந்தது. இதில் சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த ராஜா (37) என்பவர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி நேராக மோதியது.

இந்த திடீர் மோதலில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான தகவலின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ராஜாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குப் காரணமான லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளியை சேர்ந்த கணேசன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story