10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி
X
சேலம் மாவட்டத்தில் வரும் 21-ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் 3,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்

10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்த 3,000 பேர் நியமனம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், அவர்களுக்காக 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தனித்தேர்வராக 1,465 பேர் தேர்வெழுதுகின்றனர்.

ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், விருப்ப மொழி மற்றும் கணித தேர்வுகள் முடிவடைந்துள்ளன. நாளை அறிவியல் தேர்வும், 15-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், வரும் 21-ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக லைன்மேடு, தாரமங்கலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் மதிப்பெண் முகாம்கள் அமைக்கப்படும் என்றனர்.

மேலும், இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும். இப்பணியில் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story