மாணவர் தற்கொலை, நொடியில் சிதைந்த கனவுகள்

மாணவர் தற்கொலை, நொடியில் சிதைந்த கனவுகள்
X
சத்தியமங்கலத்தில் 22-வயது பட்டதாரி வேலைப் பயம் காரணமாக விஷம் குடித்து உயிரிழப்பு

கல்லூரி மாணவர் விஷத்தில் தற்கொலை

சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான வெங்கடேஷ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் மனோகரனின் மகனான வெங்கடேஷ், சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். டெக்ஸ்டைல்ஸ் நான்காம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து, பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

தற்போது அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் நடைபெற்று வரும் ஊழியர் குறைப்பு நடவடிக்கையால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சத்தியமங்கலத்திற்கு வந்த வெங்கடேஷ், தனது நண்பர் கவுதமுடன் சேர்ந்து காரில் கல்லூரிக்குச் சென்றார். காரை நிறுத்தும்போது திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. சத்தி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேலை இழக்கும் அச்சத்தால் வெங்கடேஷ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story