பட்டியல் இன மக்களுக்கு 13 கோடி ரூபாயின் நலத்திட்ட உதவிகள்

பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
ஆத்தூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சமத்துவ நாள் விழாவுக்கு சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2,086 பயனாளிகளுக்கு 13.03 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். அவர் பேசுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த 76,929 மாணவ, மாணவியருக்கு 6.74 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகையும், 13,333 மாணவர்களுக்கு 6.31 கோடி ரூபாயில் இலவச சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன. பட்டியல், பழங்குடியினரை தொழில் முனைவராக்க இந்தியாவில் முன்னோடியாக அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார். பின்னர் அமைச்சர் பட்டியல் இன மக்களுடன் சமபந்தி விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, 105 ஏக்கர் கொண்ட அய்யனார்கோவில் ஏரி வாய்க்கால் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால் என 31 பணிகளுக்கு 2.20 கோடி ரூபாயில் தூர் எடுக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. செல்வகணபதி, டி.ஆர்.ஓ. ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவலிங்கம், சின்னதுரை, நகராட்சி சேர்மன்கள் ஆத்தூர் நிர்மலாபபிதா, நரசிங்கபுரம் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu