உள்ளாட்சி தேர்தல் புகார்: 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

உள்ளாட்சி தேர்தல் புகார்: 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகார் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் சில இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு முடிவடைந்தது. மேலும் சில பகுதிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்று புகார் ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் எழுந்த புகாரால் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி வார்டு எண் 51க்கு வண்ணார்பேட்டை வாக்குச்சாவடியிலும், வார்டு எண் 179க்கு பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17க்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16க்கும், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண்25க்கும் மறுதேர்தல் நடத்த தேர்தல் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் இந்த வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. பதட்டமான இந்த வாக்குச்சாவடிகளில் மீண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai tools for education