/* */

சென்னைக்கு அருகே இப்படி ஒரு அருவியா? வாவ்..!

சென்னைக்கு மிக அருகில், வெறும் 5 கிமீ தூர பயணத்தில் இப்படி ஒரு அருவியா? வாவ்..!

HIGHLIGHTS

சென்னைக்கு அருகே இப்படி ஒரு அருவியா? வாவ்..!
X

மலை சார்ந்த பகுதியில் தானே அருவி இருக்கும் என்று நினைத்தால், சென்னைக்கு அருகே உள்ள தையூரில் உள்ள குட்டி அருவியை பார்க்க நீங்கள் மறக்காதீர்கள்.

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தையூர் கிராமத்தில், பருவமழையால் நிரம்பி வழியும் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரி நிரம்பி வழியும் போது அதன் அருகே ஒரு குட்டி அருவி உருவாகி பெருக்கெடுத்து ஓடும்.

இந்த ஆண்டு பருவமழை காலம் தாண்டி பெய்தாலும் அதிக அளவு மழைபொழிவைத் தந்துள்ளதால், தையூர் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் அருகே உள்ள குட்டி அருவியும் தண்ணீரால் நிரம்பி வழிதல்கிறது.

நல்ல மழை பெய்ததால் சுற்றிலும் உள்ள காடு நல்ல பசுமை நிலையை அடைந்துள்ளது. அதற்கு நடுவே, நிறைந்து வழியும் ஏரி, சிறிய நீர்வீழ்ச்சி என இந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

இந்த குட்டி அருவி சுமார் எட்டு அடி உயரத்தில் உள்ளது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளும் எந்த பயமும் இன்றி குளிக்க ஏற்றதாக உள்ளது. இது மலைகளில் இருந்து விழும் அருவியில் குளிப்பது போன்ற ஒரு உணர்வை நிச்சயம் கொடுக்கும்.

எப்போதும் நகரத்திற்கு உள்ளேயே சுற்றி கொண்டிருக்கும் நீங்கள், குழந்தைகளை நகரத்திற்குளேயே இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு அழைத்துச்செல்ல இது நல்ல வாய்ப்பாக இருக்கும். அமியூசிமெண்ட் பார்க் அருவி என்ன தான் இருந்தாலும் செயற்கையான அனுபவத்தையே கொடுக்கும்.

இயற்கை குழலில் அருவியை பார்க்க விரும்பும் குழந்தைகளுடன் பெரிய பட்ஜெட் போட்டு மலை பிரதேசங்களுக்கு செல்லாமல் பக்கத்திலேயே அந்த அனுபவத்தை கொடுக்கும் வாய்ப்பாக இருக்கும். பட்ஜெட்டும் கம்மி. காலையில் சென்றால் குழந்தைகளுடன் குளித்துவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கே வந்து விடலாம்.

முழுதாக நிரம்பி வழியும் தையூர் ஏரியை காண மக்கள் திரளாக வருகை தருகின்றனர். ஏரியும் கூட அதிகம் ஆழமில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஏரியின் முழு அழகைக் காண அருகே படிக்கட்டுகளுடன் கூடிய உயர்ந்த இடங்கள் உள்ளன. அதில் ஏறி, இந்த ஏரியின் ரம்யமான காட்சியைக் காணலாம். அருகே உள்ள பாறைகளின் மீது ஏற வேண்டாம். பாசி அதிகமாக இருப்பதால், வழுக்கி விட்டு அடிபட வாய்ப்புகள் அதிகம்.

சென்னையில் இருந்து தையூர் செல்வது எப்படி?

சென்னையில் நீங்கள் எங்கு இருந்தாலும், OMR சாலையில் உள்ள கேளம்பாக்கத்தை பேருந்து மூலம் எளிதாக அடையலாம். கேளம்பாக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்தால் 2 கிமீ தூரத்தில் தையூர் வந்துவிடும். ஊரின் நடுவே ஒரு கோவில் உள்ளது. அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏரியையும் அருவியையும் அமைந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் OMR வழியாக வந்தால் ஒரு லாங் ரோட் ட்ரிப் வந்த அனுபவம் இருக்கும்.

தையூர் அருவிக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை

  • குழந்தைகள் மற்றும் பெண்கள் அருவியில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • அருகே உள்ள பாறைகளின் மீது ஏற வேண்டாம்.
  • குப்பைகளை அங்கு அங்கே வீசாமல், எடுத்துச் செல்ல வேண்டும்.
  • இந்த அழகிய அருவியை பார்க்க சென்னைக்கு அருகே உள்ள தையூருக்கு நீங்கள் மறக்காதீர்கள்.

தையூர் ஏரி

தையூர் ஏரி என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு தையூர் கிராமத்தின் தலைவர் ராமசாமி செட்டியார் அவர்களால் கட்டப்பட்டது.

இந்த ஏரியின் பரப்பளவு 125 ஏக்கர் ஆகும். ஏரியின் நீளம் 2 கிலோமீட்டர் மற்றும் அகலம் 1 கிலோமீட்டர் ஆகும். ஏரியின் ஆழம் 10 மீட்டர் ஆகும்.

இந்த ஏரி சென்னை நகரத்திற்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். இந்த ஏரியிலிருந்து சென்னை நகரத்திற்கு தினமும் சுமார் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

தையூர் ஏரி ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடி, படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

தையூர் ஏரியின் சிறப்புகள்

சென்னை நகரத்திற்கு நீர் வழங்கும் முக்கிய ஆதாரம்.

ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளது.

மீன்பிடி, படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

தையூர் ஏரியின் பாதுகாப்பு

தையூர் ஏரியின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த ஏரியிலிருந்து சென்னை நகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஏரியின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏரியின் நீரின் தரத்தை பராமரிக்க வேண்டும்.

தையூர் ஏரியை பாதுகாக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

Updated On: 27 Nov 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு