குற்றால அருவியில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவியில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

குற்றாலம் அருவி.

நேற்றுவரை வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மெல்லிய சாரலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. நேற்றுவரை வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!