தென்காசி பகுதியில் மழை: குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி பகுதியில் மழை: குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதமான காலநிலையும் மெல்லிய சாரலும் அணிவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருவியில் குளிக்க அனுமதி இல்லாதது, ஏமாற்றம் தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!