வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்
X

குற்றாலத்தில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் முன்னதாகவே நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குவிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அருவிகளில் கரையோர சாலை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!