வெயில் கொடுமை அதிகரிப்பால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் இன்று ௧௦௭ டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. திருச்சி, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து வெயில் அதிகரித்து வருவதால் இரண்டாவது கோடை காலம் தொடங்கி விட்டதோ ஐயம் கொள்ளும் வகையில் சூழல் மாறி விட்டது.
இதனால் மலை ஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏரிச்சாலையை சுற்றி ஏராளமானோர் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தூண்பாறை பகுதியில் யானைகள் உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்து. சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று அதிக சுற்றுலா பயணிகள் வந்ததால் சிறு குறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu