தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
X
தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மதுரை தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13 புதன்கிழமை அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மதுரையிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் டிரைவர் (06006) நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரையில் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது