குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஐந்தருவி புலியருவி குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள் மேக்கரை பகுதிகள் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
குற்றால அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் உடல் வெப்ப அளவை கணக்கிடுவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அரசு அறிவித்த விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்த நிலையில் காலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மெயின் அருவி பகுதியில் பூஜை செய்து மலர் தூவி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஐயப்ப பக்தர்கள் திடீரென விதிமுறைகளை மீறி குவியலாக கும்பலாக நூற்றுக்கணக்கானோர் அருவியை நோக்கி விரைந்து சென்று குளியலை தொடங்கினர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி பகுதியில் ஒரே சமயத்தில் விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu