குற்றால அருவிகளில் இரவு நேரங்களில் குளிக்க அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

குற்றால அருவிகளில் இரவு நேரங்களில் குளிக்க அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
X
வரும் 25ம் தேதி முதல் குற்றால அருவிகளில் இரவு நேரங்களில் குளிக்க அனுமதி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கொரோனா தொற்றின் கட்டுப்பாட்டின் காரணமாக குற்றாலத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் பிராதன அருவி (மெயின் அருவி), ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் வருகிற 25.04.2022 முதல் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொது மக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பொது மக்கள் கோவிட் -19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story