சுற்றுலா பயணிகளுக்கு 'குஷி' செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா

சுற்றுலா பயணிகளுக்கு குஷி செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா
X

கோப்பு படம் 

சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த, கொடைக்கானல் கோடைவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தமிழகத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு (பொதுத்தேர்வு எழுதுவோர் தவிர்த்து) தேர்வு முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலா செல்வது வாடிக்கை. கோடைவாசஸ்தலனங்களான ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கொடைக்கானல் கோடைவிழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல், 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கோடை விழாவானது, ஜூன் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோடைவிழாவின்போது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்கார போட்டி ,மீன்பிடி போட்டி ,பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Tags

Next Story
ai marketing future