கொடைக்கானல் போகாதீங்க ! ஏமாந்துட போறீங்க!

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தா அந்த திட்டத்த கொஞ்சம் ஒத்திப் போடுங்க. இப்போதைக்கு அங்க போனீங்கன்னா திரும்பிதான் வரணும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மோயார் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம், எப்போது இது நீக்கப்படும் என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தமிழகத்தில் மலை வாழ் சுற்றுலாத் தளங்களில் அதிகம் பேர் முன்னுரிமை கொடுப்பது கொடைக்கானலுக்குதான். ஊட்டியை விட அதிகம் பேர் கொடைக்கானலுக்கு செல்லத்தான் விரும்புவார்கள்.
கொடைக்கானலில் பார்க்க மற்றும் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன. நீங்கள் இயற்கை அழகை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் குதிரையாறு நீர்வீழ்ச்சி அல்லது லாலாஜங்கி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம். நீங்கள் வரலாற்று இடங்களைப் பார்க்க விரும்பினால், நீங்கள் ஆர்ச் டவுனுக்குச் செல்லலாம் அல்லது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் அல்லது ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லலாம்.
மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை என பல இடங்களும் மக்கள் அதிகம் விரும்பும் இடங்களாக இருக்கின்றன.
சுற்றுலாவுக்கு வரும் மக்கள் பயன்படுத்தும் கழிவறைகள், வாகன நிறுத்தும் இடங்கள் என பல விசயங்களை சீரமைத்து வசதிகள் ஏற்படுத்தி தர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனிடையே தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் வாகன விபத்தில் சிக்கினர். இதில் சுப்பையா என்பவர் உயிரிழந்தார். இதனோடு சேர்த்து அடுத்தடுத்து இதே இடத்தில் 4 வாகனங்கள் மோதி பெரிய விபத்தாகி 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் கொடைக்கானலில் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடிப்படை வசதிகளை சரிசெய்துவிட்டே இந்த தடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. குடிநீர், பயோ கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை செய்த பிறகே சுற்றுலா பயணிகள் மேற்கண்ட இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu