குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, அருவிகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, அருவிகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்
X

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டுகிறது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குற்றால அருவிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் சமூக விலக்கலை கடைப்பிடிக்க அருவி பகுதிகளில் வட்டம் வரையப்பட்டு உள்ளது.

அதேபோல் பழுதடைந்த மின்சார கம்பங்களில் உள்ள மின் விளக்குகளை மாற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. எனவே கூடிய விரைவில் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்