/* */

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
X

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் ஆர்ப்பரித்து காெட்டும் தண்ணீர்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே தென்காசி செங்கோட்டை பாவூர்சத்திரம் கடையம் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி, புலிஅருவி, சிற்றருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவிகளில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 16 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...