குற்றாலத்தில் தாெடர் சாரல் மழை: அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றாலத்தில் தாெடர் சாரல் மழை: அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து காெட்டும் தண்ணீர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, கடையம், சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ரம்யமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story