தொடர் கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
X

தொடர் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை. குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பிரதான அருவி பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!