இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்பட 6 நாடுகளுக்கு விசா தேவை இல்லை
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி.
மார்ச் 21, 2024 வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை இலங்கை அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவைத் தவிர மேலும் 6 நாடுகள் இணைந்துள்ளன. அவை சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆகும்.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி இன்று செவ்வாய்க்கிழமை (அக் 24) சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டு உள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை இலவச விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தரும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்குவது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா பெரும்பான்மையாக உள்ளது.
அதிக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு சீரழிந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றுடன் போராடி வரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தீவுக்கு இந்த நடவடிக்கை பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தீவு நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "எதிர்வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐந்து மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்" என அமைச்சரின் பதிவினை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை கடந்த செப்டம்பரில், இந்தியா 30,000 க்கும் மேற்பட்ட வருகைகளுடன் முன்னிலை வகித்தது. இது மொத்தத்தில் 26 சதவீதத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் 8,000 க்கும் அதிகமான வருகையுடன் இரண்டாவது பெரிய குழுவாகத் தொடர்ந்து வந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களுக்கு இ-டிக்கெட் முறையையும் அமைச்சரவை முன்மொழிந்தது.
முன்மொழியப்பட்ட இலவச விசாக்கள் மற்றும் இ-டிக்கெட் முறை ஆகியவை விசா பெறுவதற்கு செலவிடும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் துறைமுக கப்பல் இணைப்புக்கு முயற்சித்து வரும் அதே வேளையில், இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை பார்க்கிறது என்று அலி சப்ரி ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இதனை தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu