குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

தாெடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர ்ஆர்ப்பரித்து காெட்டுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழை குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு.

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதலே அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கற்கள் மணல் அடித்து வரப்பட்டது. இதனால் குற்றால அருவிகளில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், தரை தளங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்யும் பணியில் குற்றாலம் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil