குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததால், அருவியில் குளிக்க அனுமதி

குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததால், அருவியில் குளிக்க அனுமதி
X

குற்றாலம் அருவி (பைல் படம்).

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று மதியம் முதல் இரவு வரை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவில் நீர் வரத்து குறைந்துள்ளதால் ஐந்தருவி மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் குற்றாலம் பகுதிகளில் மெல்லிய மழைத்துளியுடன் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!