குற்றால அருவிகளில் 2 நாட்கள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் 2 நாட்கள் குளிக்க தடை
X

குற்றாலம் அருவி.

குற்றால அருவிகளில் 14.01.2022 மற்றும் 15.01.2022 ஆகிய தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் 14.01.2022 மற்றும் 15.01.2022 ஆகிய தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future