இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர் ஆகாஷ்

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர் ஆகாஷ்
X

பைல் படம்.

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக வனத்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழைய குற்றாலத்தில் இறைவனிடங்களில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். மேலும் குற்றாலத்திற்கு சுற்றுலா மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அனைத்தையும் மேற்கொண்டு மிக விரைவில் நம்பர் ஒன் சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future