முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்
ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது,
இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியானாவில் ஒரு தலித் ஆர்வலர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக் கோரினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
யுவராஜ் சிங் அரியானாவில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிங் சண்டிகரில் இருந்து அவருடன் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட நான்கு முதல் ஐந்து ஊழியர்களுடன் ஹிசார் காவல்துறையில் ஆஜரானார்
"நீதிமன்ற உத்தரவின்படி, யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்று ஹரியானா போலீசார் தெரிவித்தனர், எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது செய்யப்படவில்லை என்று சிங்கின் பிரதிநிதி ஷஸ்மீன் காரா கூறினார்.
இது குறித்து சமூக ஆர்வலர், ரஜத் கல்சன் கூறுகையில், , யுவராஜ் சிங் ஹிசாரில் போலீசில் நேற்று சரணடைந்தார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹிசாரில் உள்ள எஸ்சி/எஸ்டி நீதிமன்றத்தில் சில நாட்களில் காவல்துறை தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும். யுவராஜ் சிங் அங்கு தான் ஜாமீன் எடுக்க வேண்டும். அவர் ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வேண்டும்.மேலும், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், நாங்கள் அதை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளோம்" என்று கூறினார்.
கடந்த ஆண்டு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், "நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu