தனியார் நூற்பாலை மினி வேன் கவிழ்ந்து விபத்து : இருவர் பலி, 8 பேர் காயம்

தனியார் நூற்பாலை மினி வேன் கவிழ்ந்து விபத்து :  இருவர் பலி, 8 பேர் காயம்
X

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு பல்வேறு பகுதியிலிருந்து பணிபுரிய தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.இவர்களுக்கு அந்த ஆலையில் இருந்து வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கமுதியில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றி வந்த அந்த ஆலைக்கு சொந்தமான மினி வேன் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமிநத்தம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருச்சுழி காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த திருச்சுழி அருகே செல்லையாபுரத்தைச் சேர்ந்த பூசையா (25) ஸ்ரீகாந்த் (17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

மேலும் வாகனத்தில் பயணம் செய்த 8 நபர்கள் காயமடைந்தனர். காயமடைந்த நபர்களுக்கு திருச்சுழி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இதில் படுகாயம் அடைந்த 3 நபர்கள் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர்.இது குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!