கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கெளரவித்த மாணவர்கள் : அருப்புக்கோட்டையில் நெகிழ்ச்சி
அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் கடந்த 1995ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1995 வருடம் படித்த மாணவர்கள் ஒன்று கூடி மாணவர்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியானது தனியார் மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் உடன் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் மாணவர்கள் ரத்த தான முகாமினை நடத்தி இரத்ததானம் செய்தனர்.
பின்னர் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ஆசிரியர்களின் கால்களில் மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.பின்னர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.மாணவர்கள் தனித்தனியாக ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா். இந்நிகழ்ச்சியானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நட்பையும், அன்பையும் பரிமாற்றம் செய்யும் நல்ல நிகழச்சி என்று ஆசிரியர்கள் கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu