அருப்புக்கோட்டை அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு வழக்கு பதிவு செய்து தாலுகா போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டை அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு  வழக்கு பதிவு செய்து  தாலுகா போலீசார் விசாரணை
X

போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தையைச் சேர்ந்த ஆறுமுகம்(45) இவர் அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சூலகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தலைமறைவான ஆறுமுகத்தை காவல்துறையினர் தேடி வந்தனர் இதை அடுத்து அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் காட்டுப்பகுதிக்குள் தூக்கிட்ட நிலையில் சடலமாக ஆறுமுகம் மீட்கப்பட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய காவல் துறையினர் ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றிஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!