சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவிலில் இன்று அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், ஆரம்பாக்கம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆவடி, திருநின்றவூர் மட்டுமல்லாது, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம்,கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில், பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி ஆலயம் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தொட்டியில் கட்டி என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் இது குறித்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் கூறுகையில் இவ்வளவு பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை, மற்றும் நடைபாதை வியாபாரிகளால் சாலை குறுகிய அளவில் காணப்படுவதோடு வாகனங்கள் வந்து செல்ல மிகவும் கடினமாக உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி வாகனங்கள் வந்து செல்ல நடவடிக்கையும் அதேபோல் வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்கீடு செய்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் கடைகளை கட்டித் தந்தால் சாலை ஆக்கிரமிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் விரைவாக தரிசனம் செய்து வெளியே செல்ல ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும். விஐபி தரிசனத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஒரே தரிசனம் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர் .
எனவே தமிழக அரசு பக்தர்கள் நலனை கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu