சிவன்மலை; ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் உலக உருண்டை

tirupur News, tirupur News today- காங்கயம், சிவன்மலை கோவிலில், ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் உலக உருண்டை, மாங்கல்ய தாலிச்சரடு வைக்கப்பட்டு, பூஜிக்கப்படுகிறது.
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை, திருமாங்கல்ய சரடு, பசு சிலை, அசுவம் என்ற குதிரையை குறிக்கும் ஆகியவை வைத்து பூஜிக்கப்படுகிறது.
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். ஆண்டவன் உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, குதிரையைக் குறிக்கும் பொருள், 2 திருமாங்கல்ய சரடு ஆகியவை நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம். தற்போது வைத்து பூஜிக்கப்படும் அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரை, 2 திருமாங்கல்ய சரடு ஆகிய 4 பொருட்கள் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போக தெரியும்," என்றனர்.
சிவன்மலை கோவில் , மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக, ‘கந்தன் பாதம் கனவிலும் காக்கும்’ என்ற பக்தி வழியில் விளங்குகிறது. இங்கு சிவன்மலை என்ற கூறப்பட்டாலும், மலைமேல் முருக கடவுள் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். படிக்கட்டுகள் வழியாக படியேறிச் சென்றும் முருகனை தரிசிக்கலாம். மலைக்குச் செல்ல பஸ் வசதியும் உள்ளது. இங்கு தினமும் மதியம், நூறு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய் கிழமைகளில், பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu