அழகிரிக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அழகிரிக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ
X

அழகிரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தான் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, மு.க.அழகிரி முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் பற்றி தான் பேசியுள்ளார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் இதில் கருத்து சொல்ல முடியாது. ஆட்சிக்கு கூட வர முடியாது என்று தெரிந்த கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகள் கூட நாங்கள் ஆதரவு கொடுத்தால் தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறுவார்கள். அது அவர்களின் உரிமை.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், திரைத்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திரைத்துறையினர் வைத்த கோரிக்கைகளுக்கு இணங்க பல்வேறு தளர்வுகளை முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்கள் படம் வெளியாகிறது. 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்