மாற்றுகட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

மாற்றுகட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்
X

தேனி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த எரணம்பட்டியைச் சேர்ந்த திமுக, மதிமுக,அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.மேலும் தேனி ஒன்றியத்தைச் சேர்ந்த சீலையம்பட்டி கிராமத்தில் 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுக,மதிமுக,பாமக, விசிக. கட்சிகளிலிருந்து விலகி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

பின்னர் புதிதாக இணைந்த கட்சியினர் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாற்று கட்சியிலிருந்து அதிமுக கட்சியில் இணைந்த அனைவரையும் வருக வருக என வரவேற்பதாகவும், தங்களுக்கு வருங்காலங்களில் பொன்னான ஒளிமயமான எதிர்காலம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதங்களில் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story