ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பாதாள மாரியம்மனுக்கு ரூ 5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் தலையாரி தெருவில் எழுந்தருளியிருக்கும் பாதாள மகா மாரியம்மன் திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு புதிய ரூபாய் தாள்களான ரூ. 100, 200, 500, 2000 ஆகிய நோட்டுகளால் ரூ. 5 லட்சம் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த பாதாள மகா மாரியம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து