கடந்த தேர்தலில் திமுக வேளாண் சட்டத்திற்கு வாக்குறுதியளித்தது : குஷ்பு

கடந்த தேர்தலில் திமுக வேளாண் சட்டத்திற்கு  வாக்குறுதியளித்தது : குஷ்பு
திமுக கடந்த தேர்தலில் வேளாண் சட்டத்தை வாக்குறுதியாக வைத்து தேர்தலை சந்தித்தனர். அதற்கு இப்போது திமுக மன்னிப்பு கேட்டால், வேளாண் சட்டத்தை பரிசீலனை செய்வதாக நடிகை குஷ்பு பேட்டி

தஞ்சாவூர் அடுத்த திருவையாற்றில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நம்ம ஊர் பொங்கல்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு யாரும் யாருக்கும் அடிமை கிடையாது, தமிழகத்தில் அதிமுக பெரிக கட்சி என்றால், நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு புரோட்டோகால் உள்ளது. அந்த விதி முறைப்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம். தை பிறந்தால் வழிபிறக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருப்பது அது எங்கள் கட்சிக்கு. ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என முடிவு செய்யட்டும். ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட நான் தயாராக இருக்கிறேன். கார்த்திக் சிதம்பரம் அப்பா பெயரை ஒதுக்கி வைத்துவிட்டு வரட்டும். பிறகு என்னுடன் போட்டி போடட்டம், நான் அவரை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை, நாங்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் விசுவாசமாக இருப்போம், பா.சிதம்பரம் போன்ற ஆட்கள் எங்களை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தால் தனது மகனுக்கு போட்டியாக வந்து விடுமோ என பயந்து எங்கள மாதிரி ஆட்களை வெளியே தள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

திமுக கடந்த தேர்தலில் வேளாண் சட்டத்தை வாக்குறுதியாக வைத்து தேர்தலை சந்தித்தனர். அதற்கு இப்போது திமுக மன்னிப்பு கேட்டால், வேளாண் சட்டம் பற்றி பரிசீலனை செய்வதாக அவர் தெரிவித்தார்.

Next Story