வேளாண் வங்கியில் 4 லட்சம் முறைகேடு வங்கி செயலாளர் கைது

வேளாண் வங்கியில் 4 லட்சம் முறைகேடு வங்கி செயலாளர் கைது
X

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிச் செயலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலராக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அனந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (49) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பணி காலத்தில் 01.04.2017 ஆம் தேதி முதல் 31.07.2018 ஆம் தேதி வரை பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்குரிய பணத்தை முறைகேடாக சொந்தச் செலவுக்கு எடுத்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக பட்டுக்கோட்டை கூட்டுறவு துணைப் பதிவாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் நடத்திய விசாரணையில் முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு காவல் பிரிவில் ஜெயபாலன் புகார் செய்தார். இதன் பேரில் அப்பிரிவினர் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் முருகேசன் ரூ. 4 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முருகேசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
ai powered agriculture