தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
X

பட்டுக்கோட்டை அருகே தம்பியை கொலை செய்த அண்ணணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிரமேல்குடி பழைய அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். விவசாயி. இவர் கடந்த செவ்வாய்கிழமை ரேசன்கடைகளில் பொங்கல் பரிசாக ரூ. 2500 பணம் மற்றும் கரும்பு போன்றவற்றை வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவருடைய இரண்டாவது மகன் விஸ்வலிங்கம் மது அருந்துவதற்காக தந்தையிடம் பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு தனது தந்தை என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார்.இந்நிலையில் தந்தை தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமனின் முதல் மகன் பாலசுப்ரமணியம் தம்பி விஸ்வலிங்கத்திடம் சென்று ஏன் அப்பாவை அடித்தாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அண்ணன், தம்பி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு கை கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் பாலசுப்பிரமணியன் கீழே கிடந்த கட்டையை எடுத்து தம்பி விஸ்வலிங்கம் தலையில் அடித்துள்ளார். இதில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே விஸ்வலிங்கம் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மதுக்கூர் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விஸ்வலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் பாலசுப்பிரமணியத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!