எரிந்த நிலையில் ஆண் சடலம், கொலையா ? தற்கொலையா

எரிந்த நிலையில் ஆண் சடலம், கொலையா ? தற்கொலையா
X

கும்பகோணம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அது கொலையா ? தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கம்மாலத் தெருவைத் சேர்ந்தவர் ஸ்ரீதர் (40) தொழிலாளி. குடிபழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது.. இவரது மனைவி சுகன்யா நரசிங்கன்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் ஈ.பி. காலனி பகுதியில் ஸ்ரீதர் எரிந்த நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடப்பதாக கிழக்கு போலீசார்க்கு பொது மக்கள் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலிசார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது முன்விரோத காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil