தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
X

தமிழக கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.

தமிழக-கேரள எல்லையான கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு பகுதியில் கேரள மாநில நுழைவு பகுதி என்பதால் அங்கு காவல் துறை,மற்றும் மதுவிலக்கு,வனத்துறை சோதனைசாவடி கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையில் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை உள்ளிட்ட வாஸ்து பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட காவல்துறை ஆரியங்காவு அய்யப்பன் கோவில் முன்பு போதை பொருட்களை கண்டறியும் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்பநாய் உதவியுடன் தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனை முடிந்த பின்பே கேரளாவுக்குள்அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!