பனை விதைகளை விதைத்த பாதியாத்திரை குழு

பனை விதைகளை விதைத்த பாதியாத்திரை குழு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள மக்கள் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஆசி பெற வேண்டி பாதையாத்திரையாக சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ரெட்டியார்பட்டி சிவராஜ் தலைமையில் குருசாமிரெட்டியார்பட்டி கபிலன் ஒருங்கிணைப்பில் 200 பக்தர்கள் 40 சிறுவர்கள் ரெட்டியார்பட்டியில் இருந்து நடை பயணமாக சென்றனர். அவர்கள் கையில் 1000 பனை விதைகள் எடுத்து சென்று வழியில் உள்ளஆற்றாங்கரை கால்வாய் கரை குளங்களின் கறைகளில் பனை விதைகளை நட்டு சென்றனர்.நடைபயணம் சென்ற முருக பக்தர்கள் பாரம்பரிய மரமான பனை மர விதைகளை நட்டு சென்றதை பொதுமக்களும் ஆன்மிக அன்பர்களும் சமுக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டி முருகப் பத்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்