சிறுமியை கர்ப்பமாக்கி வேறு பெண்ணுடன் திருமணம் : வாலிபர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கி வேறு பெண்ணுடன் திருமணம் : வாலிபர் கைது
X

தென்காசி அருகே சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ரைஸ்மில்லில் லோடுமேன் ஆக உள்ளார். இவர் பிளஸ் டூ படிக்கும் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.அவர் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் சொன்னால் என்ன ஆகுமாே என பயந்து சொல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த சிறுமி அடிக்கடி ரமேஷிடம் கூறி வந்துள்ளார். ஆனால் ரமேஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையே மாதங்கள் செல்லச் செல்ல சிறுமியின் வயிறு காட்டிக் கொடுத்து விட்டது.

இதனால் நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் ரமேஷிடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கச் சென்றனர். ஆனால் இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரமேஷ் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார் என்பது அதன் பின்னர் தான் தெரிய வந்தது.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாவூர்சத்திரம் போலீசில் ரமேஷ் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆகிவிட்டதாகவும் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!