அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X

புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய மாநில செயலளார் அ.குபேரன் 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த, அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 16-ஆவது பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். க.குமரேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். விஏகே.மனோகரன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில செயலாளர் அ. குபேரன் உரையாற்றினார்.

செயலாளர் இரா.ரெங்கசாமி, பொருளாளர் ரமா.ராமநாதன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் மு.முத்தையா, எஸ்.பால்பிரான்சிஸ், அ.மணவாளன், கே.கருப்பையா, ஏ.வள்ளியப்பன், எஸ்.அபுபக்கர்சித்திக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில் கலந்து கொண்டு மாநில செயலாளர் ச.ஹேமலதா சிறப்புரையாற்றினார். ஆ.பழனிச்சாமி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருக்கப்பட வேண்டும். புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி மீண்டும் உருவாக்க வேண்டும். ஆவுடையார்கோவிலை சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண்களுக்கு நவீன கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுவைப் பாதுகாக்க வேண்டும்.

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண்.152, 139ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்ட வற்றை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற் றும் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை (அவுட் சோர்சிங்) முறைகளை ரத்துசெய்ய வேண்டும். அரசு பயன்படுத்தும் மென்மொருள் திட்டங்களை தனியார்வசம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Updated On: 24 Sep 2023 3:00 PM GMT

Related News

Latest News

 1. க்ரைம்
  தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்...
 2. காங்கேயம்
  சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
 3. தாராபுரம்
  குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
 5. திருப்பூர் மாநகர்
  அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
 6. குமாரபாளையம்
  பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
 7. சென்னை
  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
 9. அரசியல்
  தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
 10. தொழில்நுட்பம்
  சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்