பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்

பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்

காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் மக்கள் நலன் கருதி காலியாக உள்ள 780க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 2000 மினி கிளினிக்குகள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணி நேரம் 9 மணி முதல் 4 மணிவரை என்ற அரசாணையை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து இதுநாள் வரை கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மருந்தாளுநர்கள் தமிழக அரசை கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story