தமிழக அமைச்சர் மெய்ய நாதன் காளா பிடாரி கோயில் ஸ்டிக்கர் வெளியீடு

தமிழக அமைச்சர் மெய்ய நாதன் காளா பிடாரி கோயில் ஸ்டிக்கர் வெளியீடு
X

அமைச்சர் சி.வீ.  மெய்யநாதன் காளா பிடாரி கோயில் ஸ்டிக்கரை வெளியிட்டார்.

தமிழக அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் காளாபிடாரி கோயில் ஸ்டிக்கரை அறக்கட்டளை சார்பில் வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நியமம் என்ற கிராமத்தில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக அன்னை காளா பிடாரி கோயில் கட்டப்பட்டு வருகிறது. அக்கோயிலின் கட்டுமான பணிக்கு துணை நிற்கும் அமைச்சர் சி.வீ.மெய்யநாதனுக்கு வாழ்த்துக்களை அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், துணை செயலாளர் சங்கரன் தங்கதுரை ,ஆடிட்டர் விநாயகமூர்த்தி , திருச்சி தேசியக்கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து தெரிவித்து கொண்டனர்.

அப்போது நியமம் கிராமத்தில் அருள் பாலிக்கும் அன்னை காளா பிடாரி கோயில் ஸ்டிக்கரை அமைச்சர் வெளியிட அதனை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story
ai in future agriculture