தனிமைப்படுத்தியவர்கள் தீவிர கண்காணிப்பு, நீலகிரி ஆட்சியர்
இங்கிலாந்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்தவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னமும் வரவில்லை,அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேம்பாட்டு திட்ட பணியின் கீழ் 14 வாகனங்கள் வழங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,கடந்த 25 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து நீலகிரிக்கு வந்த மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்கள் மூன்று பேருக்கும் தொற்று பரவியது. இதனைத் தொடர்ந்து 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, உருமாறிய கொரோனா பரிசோதனைக்காக புனேவில் உள்ள உருமாறிய கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
25 நாட்கள் முடிந்தும் இன்னும் அதன் முடிவுகள் வராததால் தொடர்ந்து ஆறு பேரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர்களை வைக்கப்பட்டுள்ள பகுதி மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஆட்சியர் நீலகிரி எல்லையில் கேரளா மாநிலம் அமைந்துள்ளதால் கேரளாவில் இருந்து பறவைகள் கொண்டு வருவதை முற்றிலும் தடை செய்து வனத்துறை, கால்நடை துறை ,வருவாய் துறை அதிகாரிகள் எல்லையில் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu