படுகர் இன மக்கள் வாழ்வியல் நாட்காட்டி வெளியீடு

படுகர் இன மக்கள் வாழ்வியல் நாட்காட்டி வெளியீடு
X

நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் படுகர் இன மக்களின் வாழ்வியலை கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி உதகையில் வெளியிடப்பட்டது.

நீலகிரி ஆவண காப்பகம் சார்பாக முதன் முதலில் படுகர் இன நாட்காட்டி வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நீலகிரி தொகுதி எம்பி., ராசா மற்றும் இந்து என்.ராம் பங்கேற்று நாட்காட்டியை வெளிட்டனர். தொடர்ந்து ஆ.ராசா பேசும் போது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூர்வீக குடி மக்களான படுகர் சமுதாய மக்களோடு பயணித்துள்ளேன். மரபு, பண்பாட்டு செரிவுமிக்க ஒரு சமுதாயம் படுகர் சமுதாயம்.இந்திய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த சி.பி.ராமசாமி, இந்திய கலாச்சார பண்பாடு ஆரிய மற்றும் திராவிட கலாச்சாரங்களை கொண்டு இரு பிரிவுகளாக உள்ளன. இவை இரண்டும் தான் இந்தியாவின் பண்பாட்டு கூறுகள் என்றார். திராவிட பண்பாட்டின் தொன்மையான ஒரு இனம் படுகரினம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் படுக சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil